மணப்பாட்டில் கடற்கரை தூய்மைப்படுத்தும் பணி


மணப்பாட்டில் கடற்கரை தூய்மைப்படுத்தும் பணி
x
தினத்தந்தி 19 Sept 2022 12:15 AM IST (Updated: 19 Sept 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

மணப்பாட்டில் கடற்கரை தூய்மைப்படுத்தும் பணி நடந்தது.

தூத்துக்குடி

குலசேகரன்பட்டினம்:

தூத்துக்குடி வனக் கோட்டம் சார்பில் சர்வதேச கடற்கரை தூய்மைப்படுத்துதல் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணிமணப்பாட்டில் நடைபெற்றது. மணப்பாட்டில் வனத்துறை கடற்கரை சுத்தப்படுத்தும் பணி குறித்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றதுமேலும் கடலை மாசு படுத்தக்கூடாது கடற்கரை பகுதிகளை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு கடற்கரை பகுதியில் இருந்த குப்பைகளை அகற்றினர் இதில் மாவட்ட வன அலுவலர் அபிஷேக் குமார், மணப்பாடு ஊராட்சி மன்றத் தலைவர் கிரேன்சிட்டா வினோ, ஊர் நல கமிட்டி தலைவர் பியூஸ் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.


Next Story