மாஞ்சோலை தேயிலை தோட்டத்தில் உலா வந்த யானை கூட்டம்
மாஞ்சோலை தேயிலை தோட்டத்தில் யானை கூட்டம் உலா வந்தது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
அம்பை:
மாஞ்சோலை தேயிலை தோட்டத்தில் யானை கூட்டம் உலா வந்தது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
மாஞ்சோலை
நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் மாஞ்சோலை, ஊத்து, நாலுமுக்கு, குதிரைவெட்டி உள்ளிட்ட தேயிலை தோட்ட பகுதிகள் உள்ளன.
நெல்லை மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலமாக இருப்பதால் பல்வேறு பகுதிகளில் இருந்தும் இங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
யானை கூட்டம்
மேலும் இந்த தேயிலை தோட்டங்கள் மலைப்பகுதியில் உள்ளதால் யானை, கரடி, மிளா உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் அவ்வப்போது இங்கு சுற்றித் திரிகின்றன.
இந்நிலையில் சுமார் 5-க்கும் மேற்பட்ட யானைகள் கூட்டமாக மாஞ்சோலை தேயிலை தோட்டத்தில் உலா வந்தன. இதனை அந்த வழியாக சென்ற சுற்றுலா பயணிகள் தங்களது செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். தற்போது அந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.