வீரஆஞ்சநேயர் கோவிலில் மண்டல பூஜை


வீரஆஞ்சநேயர் கோவிலில் மண்டல பூஜை
x

ஜோலார்பேட்டை அருகே வீரஆஞ்சநேயர் கோவிலில் மண்டல பூஜை நடந்தது.

திருப்பத்தூர்

ஜோலார்பேட்டை

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே அம்மையப்பன் நகர் வி.எம்.வட்டத்தில் அமைந்துள்ள வீர ஆஞ்சநேயர் கோவிலில் கடந்த 11-ந் தேதி மகா கும்பாபிஷேகம் விழா நடந்தது.

இதனை முன்னிட்டு நேற்று 15-ம் நாள் மண்டல பூஜை விழா நடைபெற்றது. விழாவையொட்டி நேற்று வீர ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது

மண்டல பூஜை விழாவை முன்னிட்டு கோவை கிளாசிக் அன்பு மற்றும் அவரது குடும்பத்தினர் சார்பாக சுமார் 1000 பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர்.

ஜோலார்பேட்டை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதற்கான ஏற்பாடுகளை எக்ஸெல் ஜி.குமரேசன், ரைஸ் மில் உரிமையாளர் ராஜா, ஹார்டுவேர்ஸ் ராஜேந்திரன் மற்றும் வீர ஆஞ்சநேயர் அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள், இளைஞர்கள் செய்து இருந்தனர்.


Next Story