முத்துவீரப்பசாமி கோவிலில் மண்டல பூஜை விழா


முத்துவீரப்பசாமி கோவிலில் மண்டல பூஜை விழா
x

கழுகுமலை முத்துவீரப்பசாமி கோவிலில் மண்டல பூஜை விழா நடைபெற்றது.

தூத்துக்குடி

கழுகுமலை:

கழுகுமலை கீழ பஜார் கறிக்கடை தெருவில் உள்ள முத்துவீரப்பசாமி கோவிலில் மண்டல பூஜை விழா நடைபெற்றது. இவ்விழாவை முன்னிட்டு காலை 10 மணிக்கு கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், லட்சுமி பூஜை நடந்தது. தொடர்ந்து பகல் 12 மணியளவில் முத்துவீரப்பசாமி மற்றும் பாதாள கண்டிஅம்மன், அங்காள பரமேஸ்வரி, சப்பாணி மாடசாமி உள்ளிட்ட 21 பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து உச்சிகால பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.


Next Story