அய்யப்பன் கோவில்களில் மண்டல பூஜை விழா


அய்யப்பன் கோவில்களில் மண்டல பூஜை விழா
x
தினத்தந்தி 30 Dec 2022 12:15 AM IST (Updated: 30 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

அய்யப்பன் கோவில்களில் மண்டல பூஜை விழா நடந்தது.

விழுப்புரம்

விழுப்புரம்:

விழுப்புரம் கிழக்கு புதுச்சேரி சாலையில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் உள்ள தர்ம சாஸ்தா அய்யப்பன் சன்னதியில் 41-வது ஆண்டு மண்டல பூஜை விழா நடைபெற்றது. விழாவையொட்டி காலை 8.30 மணிக்கு மகா அபிஷேகமும், மதியம் 12.05 மணிக்கு தீபாராதனையும், 12.30 மணிக்கு அன்னதானமும் நடந்தது. பின்னர் மாலை 6.30 மணியளவில் அய்யப்ப சாமிக்கு பலவித கனிகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு கனி தரிசனம் நடைபெற்றது. தொடர்ந்து, இரவு 7 மணிக்கு அய்யப்ப பக்தர்கள் சிறப்பு பஜனை பாடல்களை பாடினர். அதன் பிறகு 8.30 மணிக்கு சாமிக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான அய்யப்ப பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை சன்னிதான குருசாமி கனகராஜ், கோவில் அர்ச்சகர் சரவண குருக்கள் மற்றும் அய்யப்ப பக்தர்கள் செய்திருந்தனர். இதேபோல் பூந்தோட்டம் முத்துமாரியம்மன் கோவில், புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள தேர் பிள்ளையார் கோவில், ரங்கநாதன் சாலையில் உள்ள சித்தி விநாயகர் கோவில்களில் உள்ள அய்யப்பன் சன்னதிகளிலும் மண்டல பூஜை விழா சிறப்பாக நடைபெற்றது.


Next Story