கிருஷ்ணகிரியில்பாண்டுரங்க ருக்மணி சாமி கோவில் மண்டல பூஜை நிறைவு விழா


கிருஷ்ணகிரியில்பாண்டுரங்க ருக்மணி சாமி கோவில் மண்டல பூஜை நிறைவு விழா
x
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி அக்ரஹாரம் சிவாஜிநகரில் உள்ள பாண்டுரங்க ருக்மணிசாமி கோவில் கும்பாபிஷேகம் மற்றும், 87-வது பிரம்மோற்சவ விழா கடந்த ஜூன், 29-ந் தேதி தொடங்கி ஜூலை 5-ந் தேதி வரை நடந்தது. தொடர்ந்து தினமும் பூஜைகள் நடைபெற்று வந்த நிலையில் நேற்று கும்பாபிஷேகம் முடிந்து மண்டல பூஜை நிறைவடைந்தன. இதையொட்டி நேற்று காலை பாண்டுரங்கர் ருக்மணிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து, பாண்டுரங்கர் மண்டல அபிஷேக பூர்த்தியை முன்னிட்டு, கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நட்சத்திர ஹோமம், நவக்கிரஹ ஹோமம் ஆகியவை நடைபெற்றன. சாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story