மாண்டஸ் புயல் - மருத்துவ கட்டமைப்பை தயார் நிலையில் வைத்திருக்க சுகாதாரத்துறை அறிவுறுத்தல்


மாண்டஸ் புயல் - மருத்துவ கட்டமைப்பை தயார் நிலையில் வைத்திருக்க சுகாதாரத்துறை அறிவுறுத்தல்
x

மருத்துவமனைகளில் மருத்துவர்கள், செவிலியர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

சென்னை,

மாமல்லபுரத்திற்கு தென்கிழக்கில் 135 கி.மீ தொலைவில் நிலை கொண்டுள்ளது மாண்டஸ் புயல். சென்னைக்கு தெற்கு தென்கிழக்கு திசையில் 170 கி.மீ. தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. மணிக்கு 14 கி.மீ. வேகத்தில் மாண்டஸ் புயல் நகர்ந்து வருகிறது. இன்று இரவு அல்லது நாளை காலைக்குள் புயல் கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மருத்துவமனைகளில் மருத்துவர்கள், செவிலியர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

மேலும் மருத்துவ கட்டமைப்பை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.மருத்துவமனைகளில் மின் துண்டிப்பு ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

மின் துண்டிப்பு ஏற்பட்டால், மாற்றாக ஜெனரேட்டர்களை தயார் நிலையில் வைத்திருக்கவும் ,மருந்துகள், மருத்துவ உபகரணங்களை போதுமான அளவு தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

மருத்துவமனைகளில் ஐசியூ, வெண்டிலேட்டர், படுக்கைகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் .பாதிப்பு அதிகமாக இருக்கும் என கண்டறியப்பட்ட பகுதிகளில் ஆம்புலன்சுகளை நிறுத்தி வைக்க வேண்டும். எனவும் அறிவுறுத்தியுள்ளது.


Next Story