கிருஷ்ணகிரியில் 22-ந் தேதி தொடங்குகிறது: 28-வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி


கிருஷ்ணகிரியில் 22-ந் தேதி தொடங்குகிறது:  28-வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி
x

கிருஷ்ணகிரியில் 28-வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி வருகிற 22-ந் தேதி தொடங்குகிறது.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் 28-வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி வருகிற 22-ந் தேதி தொடங்குகிறது.

இது குறித்து கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மாங்கனி கண்காட்சி

கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் 28-வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி வருகிற 22-ந் தேதி தொடங்கி 25 நாட்களுக்கு நடைபெற உள்ளது. இந்த கண்காட்சியை அமைச்சர்கள் கலந்து கொண்டு திறந்து வைத்து நலத்திட்ட உதவிகள் வழங்க உள்ளனர்.

மேலும் அரசு துறைகள் சார்பாக துறைகளில் செயல்படுத்தப்படும் திட்டபணிகள் குறித்து 50 அரங்குகள் தனியார் அங்காடிகள் 80 மற்றும் கலையரங்கம் ஆகியவை அமைக்கப்பட உள்ளன. மேலும் மா கண்காட்சி அரங்கு, பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய கேளிக்கை அரங்குகள், சிற்றுண்டி உணவகங்கள், ஆவின் பாலகம், மகளிர் சுய உதவிக்குழு தயாரிப்பு பொருட்கள் விற்பனை அங்காடிகள் அமைக்கப்பட உள்ளன.

கலை நிகழ்ச்சிகள்

மேலும் மா விவசாயிகள் தங்கள் தோட்டங்களில் விளைவித்த அனைத்து மாங்கனிகளையும் காட்சிப்படுத்தப்பட உள்ளனர். தினமும் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள், உள்ளூர் கலைஞர்களின் இன்னிசை கச்சேரி, இசைப்பள்ளி மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள், பட்டிமன்றங்கள், நாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story