பாலக்கோடு பகுதியில் மாங்காய் விலை அதிகரிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி


பாலக்கோடு பகுதியில்  மாங்காய் விலை அதிகரிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி
x

பாலக்கோடு பகுதியில் மாங்காய் விலை அதிகரிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தர்மபுரி

பாலக்கோடு:

தர்மபுரி மாவட்டத்தில் பாலக்கோடு, பெல்ரம்பட்டி, மாரண்டஅள்ளி, ஜிட்டாண்டஅள்ளி, அண்ணாமலைஅள்ளி, அத்துரனஅள்ளி உள்ளிட்ட பகுதிகளில் மாங்காய்கள் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. இங்கு அறுவடை செய்யப்படும் மாம்பழங்கள் பாலக்கோடு, காரிமங்கலம், வெள்ளிச்சந்தை பகுதியில் உள்ள மொத்த விற்பனை மண்டிகளுக்கும், மாம்பழக்கூழ் தயாரிக்கும் தொழிற்சாலைகளுக்கும், வெளி மாவட்டத்திற்கும் விவசாயிகள், வியாபாரிகள் விற்பனைக்காக அனுப்பி வைக்கின்றனர். கடந்த ஆண்டு பெங்களூரா, அல்போன்சா, பீத்தா், நீலம், பங்கனபள்ளி. செந்தூரா, உள்ளிட்ட மாங்காய்கள் டன் ஒரு டன் ரூ.8 ஆயிரம் முதல் ரூ.9 ஆயிரம் வரை விற்பனையானது. ஆனால் இந்த ஆண்டு விளைச்சல் குறைவால் மாங்காய் வரத்து குறைந்தது. இதனால் 1 டன் ரூ.25 ஆயிரம் வரை விற்பனையாகிறது. மாங்காய்கள் விலை அதிகரிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Next Story