சரக்கு வாகனம் மோதி மாம்பழ வியாபாரி சாவு


சரக்கு வாகனம் மோதி மாம்பழ வியாபாரி சாவு
x
சேலம்

சங்ககிரி:-

மேட்டூர் அருகே சூரப்பள்ளி பகுதியை சேர்ந்த செல்வம் (வயது35). மாம்பழ வியாபாரி. இவர், நேற்று காலை 10 மணி அளவில் எடப்பாடி பகுதியில் உள்ள மா தோட்டத்துக்கு சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் சங்ககிரி நோக்கி வேலம்மாவலசு பஸ் நிறுத்தம் பகுதியில் வந்து கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த சரக்கு வாகனம், செல்வம் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் காயம் அடைந்த அவரை சங்ககிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், செல்வம் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். விபத்து குறித்து சங்ககிரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுதாகரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.


Next Story