மானியத்திட்டங்களில் இணைந்து பயன்பெற விவசாயிகளுக்கு அழைப்பு
குடிமங்கலம் வட்டாரத்தில் தோட்டக்கலைத்துறை சார்பில் பல்வேறு மானியத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாக அதிகாரி தெரிவித்துள்ளார்.
அழைப்பு
குடிமங்கலம் வட்டாரத்தில் காய்கறிகள் சாகுபடியில் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் ஆண்டுதோறும் தோட்டக்கலைத்துறை மூலம் பல்வேறு மானியத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் நடப்பு ஆண்டில் செயல்படுத்தப்படுத்தப்படவுள்ள மானியத்திட்டங்களில் இணைந்து பயன்பெற விவசாயிகளுக்கு குடிமங்கலம் வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் கோபிநாத் அழைப்பு விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:-
நடப்பு ஆண்டில் குடிமங்கலம் வட்டாரத்தில் பல்வேறு மானியத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் 50சதவீத மானியத்தில் 40 வெங்காயப்பட்டறைகள் அமைக்க ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் விவசாயிகளின் மானியத்தொகையான ரூ.87 ஆயிரத்து 500 பின்னேற்பு மானியமாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.
மேலும் 3 சிப்பம் கட்டும் அறை, 3 ஆயிரம் சதுர அடியில் நிழல் வலைக்குடில் ஆகியவை மானிய திட்டத்தில் வழங்கப்படவுள்ளன. 5 ஏக்கரில் நிரந்தர கல் பந்தல் அமைக்க மானியம், தக்காளி உள்ளிட்ட காய்கறிகளுக்கு குச்சி கட்டவும், வாழைக்கு முட்டு கொடுக்கவும் மானியம், 10 பேருக்கு தலா 10 என்ற வகையில் 100 தேனீக்களுடன் கூடிய தேனீ பெட்டிகள் உள்ளிட்ட பல மானியத்திட்டங்கள் நடப்பு ஆண்டில் செயல்படுத்தமானியத்திட்டங்களில் இணைந்து பயன்பெற விவசாயிகளுக்கு அழைப்புப்படவுள்ளன.
கலைஞர் கிராமங்கள்
வெங்காய விதைகள், காய்கறி நாற்றுகள் ஆகியவை விவசாயிகளுக்கு மானியத்தில் வழங்கப்படுகிறது.
இந்த திட்டங்களில் இணைந்து பயன்பெற விரும்பும் விவசாயிகள் குடிமங்கலம் வட்டார தோட்டக்கலைத்துறை அலுவலகத்தை அணுகலாம். மேலும் உழவன் செயலி வாயிலாகவும் பதிவு செய்து கொள்ளலாம். நடப்பு ஆண்டில் கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தில் குடிமங்கலம் வட்டாரத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ள ஆமந்தகடவு, கொங்கல்நகரம், கொசவம்பாளையம், பண்ணைக்கிணறு, சோமவாரப்பட்டி ஆகிய ஊராட்சிகளிலிருந்து 80 சதவீத பயனாளிகளும், மற்ற ஊராட்சிகளிலிருந்து 20 சதவீத பயனாளிகளும் தேர்வு செய்யப்படவுள்ளனர்.
மேலும் முதலில் வருபவருக்கே முன்னுரிமை அடிப்படையில் விவசாயிகளுக்கு மானியத் திட்டங்களில் இணையும் வாய்ப்பு வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.