ஈரோட்டில் "மீண்டும் மஞ்சப்பை" விழிப்புணர்வு கருத்தரங்கம்


ஈரோட்டில் மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு கருத்தரங்கம்
x

ஈரோட்டில் “மீண்டும் மஞ்சப்பை” விழிப்புணர்வு கருத்தரங்கம்

ஈரோடு

தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்ப்பது மற்றும் "மீண்டும் மஞ்சப்பை" குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் ஈரோட்டில் நேற்று நடைபெற்றது. கருத்தரங்கிற்கு மாசு கட்டுப்பாட்டு வாரிய ஈரோடு மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் மோகன் தலைமை தாங்கினார். ஈரோடு மாநகராட்சி துணை மேயர் செல்வராஜ், மாநகர் நல அதிகாரி டாக்டர் பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஈரோடு இலஞ்சி சமூக நல இயக்க நிறுவனர் ஜானகி சுப்பிரமணி வரவேற்று பேசினார்.

இந்த கருத்தரங்கில் லண்டன் ஹெர்ட்போர்ட்சியர் பல்கலைக்கழக பேராசிரியர் அ.இளங்கோவன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு அன்றாட வாழ்வில் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்ப்பது குறித்து விளக்கி பேசினார். மாசு கட்டுப்பாட்டு வாரிய உதவி பொறியாளர் செல்வகணபதி விழிப்புணர்வு குறும்படத்தை காட்சிப்படுத்தி அதற்கு விளக்கம் அளித்தார். இதில் பாலிமர் வர்த்தக சங்க தலைவர் ஜெப்ரி மற்றும் மாநகராட்சி அதிகாரிகள், தன்னார்வலர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர். மேலும், கருத்தரங்கில் அமைக்கப்பட்ட கண்காட்சியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்கள், அதற்கான மாற்று பொருட்கள், 'மஞ்சப்பை' ஆகியன பார்வைக்கு வைக்கப்பட்டன.

முடிவில் மாசு கட்டுப்பாட்டு வாரிய உதவி பொறியாளர் விஜயகுமார் நன்றி கூறினார்.


Next Story