கொட்டாம்பட்டி அருகே தடையை மீறி மஞ்சுவிரட்டு; 25 பேர் மீது வழக்கு


கொட்டாம்பட்டி அருகே தடையை மீறி மஞ்சுவிரட்டு; 25 பேர் மீது வழக்கு
x

கொட்டாம்பட்டி அருகே தடையை மீறி மஞ்சுவிரட்டு நடத்திய 25 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மதுரை

கொட்டாம்பட்டி

கொட்டாம்பட்டி அருகே உள்ள காரியேந்தல்பட்டியில் அய்யனார் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஆண்டுதோறும் மஞ்சுவிரட்டு நடத்துவது வழக்கம். இந்த ஆண்டு மஞ்சுவிரட்டு நடத்த போலீசார் அனுமதி மறுத்த நிலையில் நேற்று முன்தினம் தடையை மீறி மஞ்சுவிரட்டு நடந்தது. இதனை தொடர்ந்து கொட்டாம்பட்டி போலீசார் காரியேந்தல்பட்டியை சேர்ந்த நல்லக்கண்ணு (வயது 70), கார்த்திக் (48), தங்கம் (52), லோகநாதன் (52), சேகர்(52) உள்ளிட்ட 25 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Related Tags :
Next Story