சிங்கம்புணரி அருகே தை படையல் விழாவையொட்டி -300 காளைகள் பங்கேற்ற மஞ்சுவிரட்டு போட்டி


தினத்தந்தி 8 Feb 2023 12:15 AM IST (Updated: 8 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

சிங்கம்புணரி அருகே உச்சிகருப்பர் கோவில் தை படையல் விழாவையொட்டி 300 காளைகள் பங்கேற்ற மஞ்சுவிரட்டு போட்டி நடந்தது.

சிவகங்கை

சிங்கம்புணரி

சிங்கம்புணரி அருகே உச்சிகருப்பர் கோவில் தை படையல் விழாவையொட்டி 300 காளைகள் பங்கேற்ற மஞ்சுவிரட்டு போட்டி நடந்தது.

மஞ்சுவிரட்டு போட்டி

சிவகங்ைக மாவட்டம் சிங்கம்புணரி அருகே மதுராபுரி ஊராட்சிக்குட்பட்ட தொட்டிய காத்தான் வயலில், தை மாத படையல் விழாவும், மஞ்சுவிரட்டும் நடைபெறும்.

இந்த ஆண்டும் விவசாயம் செழித்து அறுவடைகள் முடிந்த பிறகு உச்சி கருப்பர் சுவாமி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு தைப்படையல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டு வழிபட்டனர்.

300 காளைகள் பங்கேற்பு

இதை தொடர்ந்து மஞ்சுவிரட்டு போட்டி நடந்தது. வயல் வரப்பில் கோவில் காளைக்கு முதல் மரியாதை செய்யப்பட்டு அவிழ்த்து விடப்பட்டது. பின்னர் மஞ்சுவிரட்டு காளைகள் ஒன்றன் பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டன. இந்த போட்டியில் பிரான்மலை, பொன்னமராவதி, நத்தம், கொட்டாம்பட்டி, மேலூர், திருப்பத்தூர் போன்ற பகுதிகளில் இருந்து 300-க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.

இந்த காளைகளை மைதானத்தில் திரண்டிருந்த காளையர்கள் போட்டி போட்டு அடக்கினர். காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. விழா ஏற்பாடுகளை மதுராபுரி மங்கான் கூட்டம் பங்காளிகள் வகையறா செய்திருந்தனர்.


Next Story