மங்கள கிரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்


மங்கள கிரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
x

மங்கள கிரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

திருப்பூர்

உடுமலை

 உடுமலை அருகே போடிபட்டியில் மங்கள கிரியம்மன் சமேத வெங்கடபதி, ராஜம்மாள் கோவில் உள்ளது. இந்த கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. விழாவையொட்டி மங்கள இசை, விளக்கு பூஜை, விநாயகர் வழிபாடு, மகா சங்கல்பம், சாத்துமுறை, தீபாராதனை, புற்றுக்கு பூஜை செய்து சக்தி அழைத்தல் மற்றும் பாலாற்று பூஜை ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. இதைத்தொடர்ந்து 2-ம் காலயாகம், யாத்ராதானம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. இதையடுத்து கலச புறப்பாடு, ஆலய விமானங்களுக்கும், மூலவர்களுக்கும் கும்பாபிஷேகம் நடந்தது. பின்னர் கோபூஜை, கண்ணாடி தரிசனம், கன்னிகாதரிசனம், ராஜதரிசனம், தம்பதியர் பூஜை, சுமங்கலி பூஜை,சாத்துமுறை, அர்ச்சனை, மகாதீபாராதனை, பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சிகள் நடந்தது. கும்பாபிஷேகத்தை தொடர்ந்து அம்மன் திருக்கல்யாணம் நடந்தது. விழாவில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.கும்பாபிஷேக விழாவையொட்டி அன்னதானம் நடந்தது.


Next Story