மண்மங்கலம் மாசி பெரியசாமி கோவில் திருவிழா
மண்மங்கலம் மாசி பெரியசாமி கோவில் திருவிழா நடந்தது.
மண்மங்கலத்தில் பிரசித்தி பெற்ற மாசி பெரியசாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் பங்குனி திருவிழா 4 நாட்கள் நடைபெற்றது. திருவிழாவின் முதல் நிகழ்ச்சியாக பெரியகாண்டியம்மன், மாசி பெரியசாமி, மதுரைவீரன் ஆகிய சாமிகளுக்கு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னா் 5 ஊர் கோவில் குடிப்பாட்டுக்காரர்கள், பூசாரிகளுக்கு காப்பு கட்டுதல், அதன் பின்னர் காவிரி ஆற்றில் இருந்து கோவிலுக்கு வேல் எடுத்து வரும் நிகழ்ச்சிகள் நடந்தது. 2-ம் நாள் நிகழ்ச்சியாக கரகம் பாலித்து, தீர்த்தம், பால் குடம் கோவிலுக்கு எடுத்து வரப்பட்டது. அன்று மாலையில் மாவிளக்கு பூஜை நடைபெற்றது. 3-ம் நாள் நிகழ்ச்சியாக பெரியகாண்டியம்மனுக்கு பொங்கல் வைத்தும், கிடா ெவட்டியும் பக்தா்கள் ேநா்த்திக்கடன் ெசலுத்தினா். 4-ம் நாள் நிகழ்ச்சியாக மதுரை வீரன் சாமிக்கு மறு பூஜைகள் நடந்தது. இதில் திரளான பக்தா்கள் கலந்து ெகாண்டு சாமி தரிசனம் ெசய்தனா்.