மனோ கல்லூரி ஆண்டு விழா
சேரன்மாதேவி மனோ கல்லூரி ஆண்டு விழா நடந்தது.
சேரன்மாதேவி:
சேரன்மாதேவி கோவிந்தபேரி மனோ கல்லூரியில் 15-வது ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராக மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்வியியல் துறை பேராசிரியரும், பல்கலைக்கழக கல்லூரிகளின் இயக்குனருமான வெளியப்பன் கலந்து கொண்டு, மாணவர்கள் இளைஞர்களாக மாறி தமது சக்தி முழுவதையும் சமூக நலனுக்காக உழைத்து இந்தியா உலக அளவில் முதன்மை பெற உழைக்க வேண்டும் என அறிவுரை கூறினார். வணிகவியல் துறை பேராசிரியர் தெய்வநாயகம் வரவேற்றார். கல்லூரி முதல்வர் பூவலிங்கம் ஆண்டறிக்கை வாசித்தார். நிகழ்ச்சியினை பேராசிரியர் ஹேமலதா மற்றும் தனலட்சுமி ஆகியோர் தொகுத்து வழங்கினர். விளையாட்டுப் போட்டிகள் மற்றும் கலாசார போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பேராசிரியர் வெளியப்பன் பரிசுகளை வழங்கினார். பேராசிரியர் மாரிசெல்வம் நன்றி கூறினார். இதில் கல்லூரி பேராசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர்.