ரெயில் தண்டவாளத்தில் கிடந்த சப்-இன்ஸ்பெக்டர் மகன் உடல்

ரெயில் தண்டவாளத்தில் கிடந்த சப்-இன்ஸ்பெக்டர் மகன் உடல்
x
தினத்தந்தி 30 Dec 2022 12:45 AM IST (Updated: 30 Dec 2022 12:46 AM IST)
t-max-icont-min-icon

பேரளம் அருகே ரெயில் தண்டவாளத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகன் உடல் கிடந்தது. அவர் ரெயிலில் அடிபட்டு இறந்தாரா? அல்லது ரெயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருவாரூர்

சப்-இன்ஸ்பெக்டர் மகன் உடல்

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள பேரளத்தை அடுத்த என்னகுடி கீழத்தெருவை சேர்ந்தவர் ஜெயராமன். இவர், சென்னை திருவல்லிக்கேணி போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வருகிறார்.இவரது மகன் ஹர்ஷவர்தன்(வயது 31). வெளிநாட்டில் வேலை செய்து வந்த இவர் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு வெளிநாட்டில் இருந்து சொந்த ஊருக்கு வந்துள்ளார்.

நேற்று முன்தினம் பேரளம் அருகே உள்ள இஞ்சிகுடியில் ெரயில் தண்டவாளத்தில் காயங்களுடன் ஹர்ஷவர்தன் உடல் கிடந்தது. இதுகுறித்து அந்த பகுதியில் உள்ளவர்கள் பேரளம் ெரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

ரெயிலில் அடிபட்டு இறந்தாரா?

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தண்டபாணி மற்றும் போலீசார் ஹர்ஷவர்தனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து ஹர்ஷவர்தன் ரெயிலில் அடிபட்டு இறந்தாரா? அல்லது ரெயில் முன்பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாரா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story