மந்தையம்மன் கோவில் திருவிழா


மந்தையம்மன் கோவில் திருவிழா
x
தினத்தந்தி 23 Feb 2023 7:00 PM GMT (Updated: 23 Feb 2023 7:01 PM GMT)

நத்தத்தில் மந்தையம்மன் கோவில் திருவிழா நடந்தது.

திண்டுக்கல்


நத்தம் காந்தி நகரில் மலையாளத்து கருப்பசுவாமி, மந்தையம்மன் ஆகிய தெய்வங்களுக்கு கோவில் உள்ளது. இந்த கோவிலில் மாசி மாத திருவிழா நேற்று நடந்தது. இதையொட்டி அழகர்கோவில் மலையில் இருந்து புனித தீர்த்தம் எடுத்து வந்து கருப்பசுவாமி, மந்தையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. அதையடுத்து பக்தர்களுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சி நடந்தது.

அதன் பின்னர் கோவில் வளாகத்தில் பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர். அதைத்தொடர்ந்து அம்மன்குளம் சென்று தீர்த்தம் எடுத்தல், முளைப்பாரி ஊர்வலம், கிடாய் வெட்டுதல், தீச்சட்டி எடுத்தல், பக்தர்கள் பூக்குழி இறங்குதல், கரகம் அம்மன்குளம் செல்லுதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. முடிவில் அம்மனுக்கு மஞ்சள் நீராடுதல் நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவடைந்தது. திருவிழாவில் நத்தம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் திரளாக பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை காந்திநகர் ஊர்பொது மக்கள் செய்திருந்தனர்.



Next Story