'மாண்டஸ்' புயல் - சென்னை மாநகராட்சி பூங்காக்கள் மற்றும் விளையாட்டு திடல்கள் நாளை முதல் மூடல்
மறு அறிவிப்பு வரும் வரை மூட சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது
சென்னை,
வங்கக்கடலில் உருவாகி உள்ள மாண்டஸ் புயல் நாளை நள்ளிரவு புதுச்சேரி - ஸ்ரீஹரிகோட்டா இடையே மாமல்லபுரம் அருகே புயல் கரையை கடக்கும். நாளை காலை வரை தீவிர புயலாகவே நகர்ந்து பிறகு சற்றே வலுக்குறைந்து மாண்டஸ் புயல் கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து தற்போது 520 கி.மீ தென்கிழக்கு திசையில் மாண்டஸ் புயல் நிலைகொண்டுள்ளது. மணிக்கு 12 கி.மீ வேகத்தில் நகர்ந்து வரும் மாண்டஸ் புயல் மாலையில் வலுப்பெறும் என கணிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் புயல் காரணமாக சென்னை மாநகராட்சி பூங்காக்கள் மற்றும் விளையாட்டு திடல்கள் நாளை முதல் மறு அறிவிப்பு வரும் வரை மூட சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது,மாண்டஸ் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
Related Tags :
Next Story