பெட்டிக்கடை நடத்த இடையூறு செய்யும் டிரைவர்


பெட்டிக்கடை நடத்த இடையூறு செய்யும் டிரைவர்
x
திருப்பூர்


திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் வினீத் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கடத்தூர் பகுதியை சேர்ந்த கார்த்திகா தேவி தனது மாற்றுத்திறனாளி மகன் மற்றும் அப்பகுதியை சேர்ந்தவர்களுடன் வந்து மனு கொடுத்தார். அந்த மனுவில், 'கணியூர் பஸ் நிலையம் அருகே மாற்றத்திறனாளிக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு இல்லாமல் பெட்டிக்கடை நடத்தி வருகிறேன். எனது கடையில் 2 மாற்றுத்திறனாளி பெண்கள் வேலை செய்கிறார்கள். கடை வைக்க நெடுஞ்சாலைத்துறையிடம் அனுமதி பெற்றுள்ளேன். ஊராட்சி நிர்வாகத்துக்கு தொழில்வரி செலுத்தி வருகிறேன்.

நான் கணவரை இழந்தவர். எனது குழந்தை சிறப்பு குழந்தை. இந்த கடையை நடத்துவதற்கு வங்கிக்கடன் பெற்றுள்ளேன். கடையை விரிவாக்கம் செய்தபோது அப்பகுதியை சேர்ந்த தனியார் டிரைவர் ஒருவர், பணியை தடுத்து இடையூறு ஏற்படுத்தி வருகிறார். பெட்டிக்கடையை தொடர்ந்து நடத்த உதவ வேண்டும்' என்று கூறியுள்ளார்.


Next Story