சாலையில் அடிபட்டு கிடந்த மண்ணுளி பாம்பு வனத்துறையினரிடம் ஒப்படைப்பு


சாலையில் அடிபட்டு கிடந்த மண்ணுளி பாம்பு வனத்துறையினரிடம் ஒப்படைப்பு
x

மேலப்பாளையம் அருகே சாலையில் அடிபட்டு கிடந்த மண்ணுளி பாம்பு வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

திருநெல்வேலி

மேலப்பாளையம் அருகே உள்ள கருங்குளம் பகுதியில் சாலையில் ஒரு மண்ணுளி பாம்பு அடிபட்டு கிடந்தது. அந்த பாம்பை தமிழக மக்கள் ஜனநாயக கட்சி நெல்லை மண்டல செயலாளர் அப்துல் ஜப்பார், சுலைமான், நயினார் ஆகியோர் மீட்டு பாளையங்கோட்டை என்.ஜி.ஓ. காலனியில் உள்ள வனத்துறை அலுவலரிடம் ஒப்படைத்தனர். அங்கு வனத்துறை கால்நடை ஆய்வாளர், அந்த பாம்புக்கு சிகிச்சை அளித்தார்.



Next Story