பொதுமக்களுக்கு மனுஸ்மிருதி புத்தகங்கள்


பொதுமக்களுக்கு மனுஸ்மிருதி புத்தகங்கள்
x

பொதுமக்களுக்கு மனுஸ்மிருதி புத்தகங்கள் வழங்கப்பட்டது.

வேலூர்

குடியாத்தத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் பொதுமக்களுக்கு மனுஸ்மிருதி புத்தகங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. குடியாத்தம் நெல்லூர் பேட்டை காந்தி சிலை அருகே தொடங்கிய நிகழ்ச்சிக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேலூர் பாராளுமன்ற தொகுதி செயலாளர் சிவ.செல்ல பாண்டியன் தலைமை தாங்கி பொதுமக்களுக்கு மனுஸ்மிருதி புத்தகங்களை வழங்கினார். நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் வெங்கடேசன், கே.வி. குப்பம் தொகுதி பொறுப்பாளர் சுரேஷ்குமார், மாவட்ட துணை செயலாளர் விவேக், சமூக நல்லிணக்கபேரவை மாவட்ட அமைப்பாளர் குருவிகணேசன், மாவட்ட தொண்டர் அணி அமைப்பாளர் ராஜேஷ், நிர்வாகிகள் முனிரத்தினம், அதியமான், வினோத்குமார் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று பொது மக்களுக்கு மனுஸ்மிருதி புத்தகங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

இந்த நிகழ்ச்சியையொட்டி குடியாத்தம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.


Next Story