தூத்துக்குடி மாப்பிள்ளையூரணியில்கால்நடைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம்


தூத்துக்குடி மாப்பிள்ளையூரணியில்கால்நடைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம்
x
தினத்தந்தி 25 Jan 2023 12:15 AM IST (Updated: 25 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாப்பிள்ளையூரணியில் கால்நடைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் கால்நடைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் மாப்பிள்ளையூரணி கணபதி நகரில் நடந்தது. முகாமுக்கு கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர் ஜோசப் தலைமை தாங்கினார். மாப்பிள்ளையூரணி கால்நடை உதவி மருத்துவர் வினோத், கால்நடை ஆய்வாளர் ஷர்மிளி, பராமரிப்பு உதவி அலுவலர் பரமசிவம் ஆகியோர் அடங்கிய குழுவினர் கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தனர்.

முகாமில் கால்நடைகளுக்கு செயற்கை முறையில் கருவூட்டல் செய்தல், கால்நடைகளுக்கு குடற்புழு நீக்கம் செய்தல், தாது உப்பு கலவை வழங்குதல், கால்நடைகளுக்கு தடுப்பூசி மற்றும் கோழிகளுக்கு கழிச்சல் தடுப்பூசி உள்ளிட்டவை போடப்பட்டன. முகாமில் சிறந்த இடையேறி கன்றுகளை வளர்த்த 3 பேருக்கும், சிறந்த கால்நடை வளர்ப்பு விவசாயிகள் 3 பேருக்கும் பரிசு வழங்கப்பட்டன.

முகாமில் சுற்று வட்டாரங்களை சேர்ந்த மக்கள் தங்கள் கால்நடைகளை முகாமுக்கு கொண்டு சிகிச்சைகள் பெற்றனர். முகாமில் 75 பசுமாடுகள், 719 வெள்ளாடுகள், 89 நாய்கள், 250 கோழிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டன.


Next Story