மாப்பிள்ளையூரணியில் புதிய தார்சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை


மாப்பிள்ளையூரணியில்  புதிய தார்சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை
x
தினத்தந்தி 18 Oct 2022 12:15 AM IST (Updated: 18 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

மாப்பிள்ளையூரணியில் புதிய தார்சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நடந்தது.

தூத்துக்குடி

சாயர்புரம்:

தூத்துக்குடி யூனியன் மாப்பிள்ளையூரணியில் ஒன்றிய பொது நிதியில் 2022-2023 ஆண்டு நிதி ரூ.19.45 லட்சத்தில் ராஜபாளையத்தில் இருந்து மாதாநகர் வரை புதிய தார் சாலை அமைக்கப்பட உள்ளது. இதற்கான பூமி பூஜை, தூத்துக்குடி யூனியன் தலைவர் வசுமதி அம்பாசங்கர் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் யூனியன் ஆனையாளர் ராமராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர் நாகராஜன், ஒன்றிய பொறியாளர் தளவாய், ஒன்றிய கவுன்சிலர் அந்தோணி தனுஷ் பாலன், தொம்மை சேவியர், முத்துமாலை, ஆனந்தி, மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் பிலோமின்ராஜ், மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் சியான் செல்வம், கிளை செயலாளர்கள் நெல்சன், முருகன், உலகநாதன், வேல் முருகராஜ், கழக முன்னோடிகள் ஜெயராஜ், ஜெயசிங், ராஜபாளையம் அப்பன் ராஜ், ஊர் நிர்வாகிகள் விமல், வினோத் சிங், நிக்சன், தொம்மை அந்தோணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story