போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் போட்டி


போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் போட்டி
x

காரைக்குடியில் போதைப்பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு மாரத்தான் போட்டியை அமைச்சர் பெரியகருப்பன் தொடங்கி வைத்தார்.

சிவகங்கை

காரைக்குடி,

காரைக்குடியில் போதைப்பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு மாரத்தான் போட்டியை அமைச்சர் பெரியகருப்பன் தொடங்கி வைத்தார்.

மாரத்தான் போட்டி

காரைக்குடியில் போதை பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது. இதற்கான தொடக்க விழா காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தலைமை தாங்கி கொடியசைத்து மினி மாரத்தான் போட்டியினை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-

மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவது மட்டுமின்றி விளையாட்டிலும் சிறந்து விளங்க வேண்டும் என்பதற்காக தமிழக அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளது. அதனை மாணவர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். தமிழகத்தில் சில பகுதிகளில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி வளாகத்திற்கு அருகில் போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாகவும், மாணவர்களின் நலன்கள் பாதிக்கப்பட்டு வருவதாகவும் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் அதனை முற்றிலுமாக ஒழிப்பதற்காக முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். போதையில்லா தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்ற அடிப்படையில் தமிழகம் முழுவதும் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்.

விழிப்புணர்வு

அதன் அடிப்படையில் அனைத்து மாவட்டங்களிலும் போதை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு உறுதிமொழி நிகழ்ச்சி நடைபெற்றது. தற்போது காரைக்குடி பகுதி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொள்ளும் மினி மாரத்தான் போட்டி நடத்தப்படுகிறது.

இவ்வாறு கூறினார்.

மினி மாரத்தான் போட்டி காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக விளையாட்டு மைதானத்தில் தொடங்கி நகரின் முக்கிய வீதியில் வழியாக சென்று கவியரசு கண்ணதாசன் மணிமண்டபத்தை அடைந்தது. போட்டியில் கலந்து கொண்டவர்களுக்கு சான்றிதழ்களையும், பரிசுகளையும் அமைச்சர் பெரியகருப்பன் வழங்கினார்.

கலந்து கொண்டவர்கள்

இந்த நிகழ்ச்சியில் கார்த்திக் சிதம்பரம் எம்.பி., காரைக்குடி நகர மன்ற தலைவர் முத்துத்துரை, கல்லல் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் சொர்ணம் அசோகன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் ராதா பாலசுப்ரமணியன், நாகனி செந்தில்குமார்,வக்கீல் பாலசுப்பிரமணியன் அழகப்ப பல்கலைக்கழக துணை வேந்தர் பொறுப்புக்குழு உறுப்பினர் கருப்புசாமி, தேவகோட்டை வருவாய் கோட்டாட்சியர் பிரபாகரன், பேரூராட்சி தலைவர்கள் ராதிகா ராமச்சந்திரன், கார்த்திக் சோலை சங்கீதா செல்லப்பன் காரைக்குடி தாசில்தார் மாணிக்கவாசகம் ஆகியோர் கலந்து கொண்டனர்.


Next Story