உலக போதைப்பொருள் ஒழிப்பு தினத்தையொட்டி மினி மாரத்தான்
உலக போதைப்பொருள் ஒழிப்பு தினத்தையொட்டி மினி மாரத்தான் நடந்தது.
நாமக்கல்
ராசிபுரம்:
உலக போதைப்பொருள் ஒழிப்பு தினத்தையொட்டி புதுச்சத்திரம் போலீஸ் நிலையம் மற்றும் ஞானமணி கல்வி நிறுவனங்களின் சார்பில் மினி மாரத்தான் நடந்தது. இதனை ஞானமணி கல்வி நிறுவனங்களின் தலைவர் அரங்கண்ணல் கொடியசைத்து தொடங்கி வைத்தார். புதுச்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் முன்னிலை வகித்தார். கல்லூரி வளாகத்தில் தொடங்கிய மினி மாரத்தான் புதுச்சத்திரம் வரை நடந்தது. இதில் ஞானமணி கல்வி நிறுவனங்களின் தாளாளர் மாலா லீனா, இணைத் தலைவர் மதுவந்தினி, முதன்மை நிர்வாகி பிரேம்குமார் மற்றும் மாணவ-மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
Related Tags :
Next Story