நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோட்டில் போதை பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு மாரத்தான் போட்டி


நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோட்டில்  போதை பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு மாரத்தான் போட்டி
x

நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோட்டில் போலீசார் சார்பில் போதை பொருட்கள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடந்தது.

நாமக்கல்

நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோட்டில் போலீசார் சார்பில் போதை பொருட்கள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடந்தது.

போலீஸ் சூப்பிரண்டு

நாமக்கல் மாவட்ட போலீசார் சார்பில் போதை பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடந்தது. நாமக்கல் பூங்கா சாலையில் போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி கொடியசைத்து மாரத்தான் போட்டியை தொடங்கி வைத்தார். பூங்கா சாலையில் தொடங்கிய மாரத்தான் கோட்டை சாலை, பெரியபட்டி சாலை, தீயணைப்பு நிலையம் மற்றும் பார்க் பப்ளிக் பள்ளி வளாகத்தில் முடிவுற்றது. இதில் பல்வேறு தனியார் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு ஓடினர். முன்னதாக மாணவ, மாணவிகளுக்கு போதை பொருட்களை தவிர்ப்பது, இயற்கையை பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இதனிடையே மாணவர்கள் பிரிவில் சுரேந்தர் முதல் இடத்தையும், ஜீவா 2-வது இடத்தையும், பிரவீன்குமார் 3-வது இடத்தையும் பிடித்தனர். மாணவிகள் பிரிவில் இலக்கியா ஸ்ரீ முதல் இடத்தையும், அபர்னா 2-வது இடத்தையும், தனுஸ்ரீ 3-வது இடத்தையும் பிடித்தனர். அவர்களுக்கு பரிசுகளும், மாரத்தான் ஓட்டத்தில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

ராசிபுரம்

ராசிபுரம் உட்கோட்ட போலீசார் சார்பில் போதை பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடந்தது. போட்டியை ராசிபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார். கொங்கு திருமண மண்டபம் அருகே தொடங்கிய மாரத்தான் போட்டி கோனேரிப்பட்டி, ராசிபுரம் புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம் வழியாக சென்று சேலம் சாலையில் உள்ள அரிமா மண்டபம் அருகே முடிவற்றது. இதில் ஏராளமான தனியார் கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு ஓடினர்.

ஆண்கள் பிரிவில் அரவிந்த் முதல் இடத்தையும், தினேஷ் 2-வது இடத்தையும், பேச்சியப்பன் 3-வது இடத்தையும் பிடித்தனர். பெண்கள் பிரிவில் வடிவம்மாள் முதல் இடத்தையும், நிறைமதி 2-வது இடத்தையும், நந்தினி 3-வது இடத்தையும் பிடித்தனர். பின்னர் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிக்கும் நிகழ்ச்சி நடந்தது. போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மகாலட்சுமி, ஹேமாவதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சப் இன்ஸ்பெக்டர் தங்கம், போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குணசிங் கலந்து கொண்டனர். ராசிபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கினார்.

திருச்செங்கோடு

திருச்செங்கோடு உட்கோட்ட போலீசார், நகர போலீசார் சார்பில் திருச்செங்கோட்டில் போதை பொருட்கள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. திருச்செங்கோடு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி முன்பு மாரத்தான் போட்டியை திருச்செங்கோடு துணை போலீஸ் சூப்பிரண்டு மகாலட்சுமி கொடியசைத்து தொடங்கி வைத்தார். மாரத்தான் போட்டி பரமத்திவேலூர் சாலை வாலரைகேட் வரை சென்று முடிவுற்றது. இதில் 70-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு ஓடினர். பின்னர் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் கலந்து கொண்டவர்களுக்கு பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்பட்டன. இதில் திருச்செங்கோடு டவுன் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், எலச்சிபாளையம் இன்ஸ்பெக்டர் குலசேகரன், திருச்செங்கோடு ரூரல் இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story