உலக இளைஞர் திருவிழாவையொட்டி கிருஷ்ணகிரியில் மாரத்தான் போட்டி


உலக இளைஞர் திருவிழாவையொட்டி கிருஷ்ணகிரியில் மாரத்தான் போட்டி
x
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் உலக இளைஞர் திருவிழாவையொட்டி மாரத்தான் போட்டிகள் நடந்தன.

மாரத்தான் போட்டிகள்

கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில், உலக இளைஞர் திருவிழாவையொட்டி தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கத்தின் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகின் சார்பில், மாரத்தான் போட்டி தொடங்கியது. இதை உதவி கலெக்டர் பாபு கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உலக இளைஞர் திருவிழா 2023-24-ஐ கொண்டாடும் விதமாக திட்ட இயக்குனர், தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கத்தின் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடடு அலகின் சார்பில் இந்த மாரத்தான் போட்டி நடந்தது. இந்த மாரத்தான் போட்டி 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு நடத்தப்பட்டது. 17 வயது முதல் 25 வயது வரை உள்ள பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மாணவ, மணாவிகள் கலந்து கொண்டனர்.

விழிப்புணர்வு

இந்த மாரத்தான் போட்டி புதிய பஸ் நிலையத்தில் தொடங்கி லண்டன்பேட்டை, தாலுகா அலுவலகம் வழியாக கிருஷ்ணகிரி 5 ரோடு ரவுண்டானா வரை சென்று, மீண்டும் அதே வழியில் வனச்சரக அலுவலகம் வழியாக வந்து மாவட்ட விளையாட்டு அரங்கில் நிறைவடைந்தது. இந்த போட்டியின் மூலம் போதை பொருள் தடுப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில், மாவட்ட விளையாட்டு அலுவலர் மகேஷ்குமார், மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகு மாவட்ட திட்ட மேலாளர் அருள், தாசில்தார் சம்பத், செஞ்சிலுவை சங்க செயலாளர் செந்தில்குமார், மாவட்ட எச்.ஐ.வி, எய்ட்ஸ் கூட்டமைப்பு தலைவர் குமார், மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு பணியாளர்கள் மற்றும் தொண்டு நிறுவன பணியாளர்கள், ரெட் கிராஸ் அமைப்பினர், கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.


Next Story