திண்டுக்கல்லில் மினி மாரத்தான் போட்டி


திண்டுக்கல்லில் மினி மாரத்தான் போட்டி
x
தினத்தந்தி 1 May 2023 2:00 AM IST (Updated: 1 May 2023 2:01 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல்லில் மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது.

திண்டுக்கல்

திண்டுக்கல் எம்.எஸ்.பி. சோலை நாடார் நினைவு மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் சங்கம், திண்டுக்கல் மாவட்ட தடகள சங்கம் சார்பில் மாநில அளவிலான மினி மாரத்தான் போட்டி, திண்டுக்கல்லில் நேற்று நடைபெற்றது. இதற்கான தொடக்க நிகழ்ச்சிக்கு ஜி.டி.என். கல்லூரி தாளாளர் ரெத்தினம் தலைமை தாங்கினார். மாவட்ட தடகள சங்க செயலாளர் சண்முகம், எம்.எஸ்.பி. பள்ளி தாளாளர் முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதையடுத்து எம்.எஸ்.பி. பள்ளி விளையாட்டு மைதானத்தில் இருந்து மாரத்தான் போட்டி தொடங்கியது. இதில் 300-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று ஓடினர்.

பின்னர் போட்டியில் இலக்கை எட்டி முதலிடம் பிடித்த கன்னியாகுமரியை சேர்ந்த ஜெகன் என்பவருக்கு முதல் பரிசாக ரூ.25 ஆயிரமும், 2-ம் இடம் பிடித்த தஞ்சையை சேர்ந்த பிரகதீஸ்வரனுக்கு ரூ.20 ஆயிரமும், 3-ம் இடம் பிடித்த ராஜபாளையத்தை சேர்ந்த மாரிசரத்துக்கு ரூ.15 ஆயிரமும் பரிசாக வழங்கப்பட்டது. மேலும் 4, 5-ம் இடம் பிடித்தவர்களுக்கு தலா ரூ.3 ஆயிரமும், 6 முதல் 10 இடங்களை பிடித்தவர்களுக்கு தலா ரூ.1,000-மும் பரிசாக வழங்கப்பட்டது.


Related Tags :
Next Story