மார்கழி பஜனை ஊர்வலம்


மார்கழி பஜனை ஊர்வலம்
x
தினத்தந்தி 9 Jan 2023 12:15 AM IST (Updated: 9 Jan 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

செங்கோட்டையில் மார்கழி பஜனை ஊர்வலம் நடந்தது.

தென்காசி

செங்கோட்டை:

செங்கோட்டை ஆரியநல்லுார் முப்புடாதி அம்மன் கோவிலில் யாதவ சமுதாயம் மற்றும் கரையாளா் சமுதாய நலச்சங்கம் சார்பில் மார்கழி திருப்பாவை நோன்பு திருவிழா துவங்கப்பட்டு நாள்தோறும் பஜனை மற்றும் ஊர்வல நிகழ்ச்சி நடந்தது. திருவிழா நிகழ்ச்சியாக காலை வேதநாராயணன் பஜனை மண்டலி குழுவினரின் திருப்பாவை பஜனை நடத்தப்பட்டு நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று கோவிலை வந்தடைந்தது. ஊர்வலத்தில் சிறுமிகள் கோலாட்டம் மற்றும் இசை வாத்தியங்களுடன் பஜனைபாடி வீதிகளில் வலம் வந்தனா். அதனைதொடா்ந்து காலை 10 மணிக்கு முப்புடாதி அம்மன் மற்றும் பரிவார தேவதைகளுக்கு சிறப்பு பூஜை நடந்தது. நிகழ்ச்சிக்கு சமுதாய நலச்சங்க நிர்வாகிகள், பஜனைக்குழுத் தலைவா் மருதப்பன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.


Next Story