வாசுதேவநல்லூர் கோவிலில் மார்கழி மாத பஜனை


வாசுதேவநல்லூர் கோவிலில் மார்கழி மாத பஜனை
x
தினத்தந்தி 18 Dec 2022 12:15 AM IST (Updated: 18 Dec 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

வாசுதேவநல்லூர் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் மார்கழி மாத பஜனை நடந்தது.

தென்காசி

வாசுதேவநல்லூர்:

வாசுதேவநல்லூரில் உள்ள அர்த்தநாரீஸ்வரர் என்ற சிந்தாமணி நாதர் கோவிலில் மார்கழி மாதத்தில் தினமும் அதிகாலையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள், சிவ தொண்டர்களின் பஜனை நடைபெறுவது வழக்கம். அதன்படி, மார்கழி மாத பிறப்பையொட்டி அதிகாலையில் சிவ தொண்டர்கள் திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளி எழுச்சி பாடல்கள் பாடியபடி கோவிலில் இருந்து புறப்பட்டனர். அவர்கள் வெங்கடாஜலபதி சுவாமி கோவில், நான்கு ரத வீதிகள் வழியாக சென்று மீண்டும் கோவிலை வந்தடைந்தனர். அதைத்தொடர்ந்து 5.30 மணிக்கு சுவாமிக்கு பூஜைகள் நடைபெற்றது. இதில் வாசுதேவநல்லூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.


Next Story