மாரியம்மன் கோவில் திருவிழா


மாரியம்மன் கோவில் திருவிழா
x

மாரியம்மன் கோவில் திருவிழா நடந்தது.

கரூர்

திருக்காடுதுறையில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் திருவிழா கடந்த 30-ந்தேதி பூச்சாட்டுதல் நிகழ்ச்சிடன் தொடங்கியது. தொடர்ந்து கம்பம் நடும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. பின்னர் தினமும் பக்தர்கள் கம்பத்திற்கு புனிதநீர் ஊற்றி மாரியம்மனை வழிபட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் வடிசோறு நிகழ்ச்சியும், நேற்று அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும் நடைபெற்றது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை பக்தர்கள் அக்னி குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சியும், ெதாடந்து பொங்கல் வைத்தல், மாவிளக்கு எடுத்தும் வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது. நாளை கிடா வெட்டு பூஜையும், அம்மன் திருவீதி உலா, மஞ்சள் நீராடல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.


Next Story