மாரியம்மன் கோவில் தேரோட்டம்
தலைவாசல்:-
தலைவாசல் அருகே கிழக்கு ராஜாபாளையம் கிராமத்தில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் தேர்த்திருவிழா நேற்று நடந்தது. பக்தர்கள் நேர்த்திக்கடனாக இடுப்பு, கன்னம் உள்ளிட்ட பகுதிகளில் அலகு குத்தி ஊர்வலமாக வந்தனர். பம்பை உடுக்கையுடன், மேளதாளத்துடன், அக்கினி கரகம் பூங்கரகம் ஏந்தி பக்தர்கள் ஊர்வலமாக வந்தனர். நேற்று மாலை 4.30 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது.. தேரோட்டம் முக்கிய வீதி வழியாக சென்று மாலை 6 மணிக்கு நிலையை அடைந்தது. தேரோட்டத்தில் நல்லதம்பி எம்.எல்.ஏ. உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விழாவில் அம்மனுக்கு பால், பன்னீர், இளநீர், தேன் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில் பக்தர்கள் ஆடு, கோழி பலியிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். அம்மன் பிறப்பு குறித்த சிறப்பு சொற்பொழிவு நடந்தது.