மாரியம்மன் கோவில் தேரோட்டம்


மாரியம்மன் கோவில் தேரோட்டம்
x
தினத்தந்தி 21 Jun 2023 3:19 AM IST (Updated: 21 Jun 2023 3:23 PM IST)
t-max-icont-min-icon

மாரியம்மன் கோவில் தேரோட்டம் நடந்தது.

பெரம்பலூர்

குன்னம்:

பெரம்பலூர் அருகே செங்குணம் கிராமம் அண்ணா நகர் பகுதியில் உள்ள மாரியம்மன் கோவிலில் தேர்த்திருவிழா நடைபெற்றது. விழாவையொட்டி கடந்த 16-ந் தேதி இரவு சாமி குடி அழைக்கப்பட்டு சிறப்பு பூஜை செய்து, குதிரை வாகனத்தில் திருவீதி உலா வந்தது. 2-ம் நாள் இரவில் சிறப்பு பூஜை செய்து, மயில் வாகனத்தில் சாமி வீதியுலா வந்தது. 3-ம் நாள் பகலில் பக்தர்கள் பால்குடம் எடுத்து மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து வழிபட்டனர். இரவில் மாவிளக்கு பூஜையும், சிம்ம வாகனத்தில் சாமி திருவீதி உலாவும் நடைபெற்றது. 4-ம் நாளன்று பக்தர்கள் மாரியம்மனுக்கு அங்கப்பிரதட்சணம் செய்தும், அலகு குத்தியும், மாலையில் அக்னிச்சட்டி ஏந்தி, தீ மிதித்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். இரவில் பொங்கல் பூஜையுடன் பல்லக்கில் சாமி வீதியுலா நடைபெற்றது.

நேற்று விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடைபெற்றது. இதில் தேர் காலையில் தேரடி வீதியில் இருந்து புறப்பட்டு செங்குணம் கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக சென்று மாலையில் நிலைக்கு வந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். இன்று(புதன்கிழமை) இறுதி நாள் நிகழ்ச்சியாக மஞ்சள் நீர் விளையாட்டு விழா நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், முக்கியஸ்தர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் செய்தனர். மேலும் பாதுகாப்பு ஏற்பாடுகளை மருவத்தூர் போலீசார் செய்திருந்தனர்.


Next Story