ஓசூர் பகுதியில் விலை வீழ்ச்சியால் சாமந்திப்பூ செடிகள் டிராக்டர் மூலம் அழிப்பு விவசாயிகள் கவலை


ஓசூர் பகுதியில் விலை வீழ்ச்சியால் சாமந்திப்பூ செடிகள் டிராக்டர் மூலம் அழிப்பு விவசாயிகள் கவலை
x

ஓசூர் பகுதியில் சாமந்திப்பூ விலை வீழ்ச்சியால் கவலை அடைந்த விவசாயிகள் செடிகளை டிராக்டர் மூலம் அழித்தனர்.

கிருஷ்ணகிரி

ஓசூர்

ஓசூர் பகுதியில் சாமந்திப்பூ விலை வீழ்ச்சியால் கவலை அடைந்த விவசாயிகள் செடிகளை டிராக்டர் மூலம் அழித்தனர்.

விளைச்சல் அதிகரிப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியில் ஓசூர், பாகலூர், பேரிகை, சூளகிரி, தேன்கனிக்கோட்டை, கெலமங்கலம் அகலக்கோட்டை, தளி உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் மலர் சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். பண்டிகை மற்றும் விழா காலங்களில் சாமந்திப்பூ அதிகளவில் விற்பனையாவதாலும், பூ மார்க்கெட்டுகளில் நல்ல வரவேற்பு இருப்பதாலும் சாமந்திப்பூ அதிகம் சாகுபடி செய்ய விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் ஓசூர் பகுதியில் சாமந்திப்பூ விளைச்சல் அதிகரிப்பால் மார்க்கெட்டுக்கு வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக சமீப நாட்களாக சாமந்திப்பூ விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. விநாயகர் சதுர்த்தி பண்டிகை நேரத்தில் பூ மார்க்கெட்டுகளில் ஒரு கிலோ சாமந்திப்பூ ரூ.100, 120 என விற்கப்பட்டது.

டிராக்டர் மூலம் அழிப்பு

கடந்த சில நாட்களாகவே வரத்து அதிகரித்ததால் விலை வீழ்ச்சி அடைந்து ஒரு கிலோ ரூ.30-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால் பூ கடைகளிலும், சாலையோர கடைகளிலும் கூவி, கூவி விற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இருந்த போதிலும் சாமந்திப்பூவை வாங்க மக்கள் ஆர்வம் காட்டவில்லை. இதனால் கவலை அடைந்த விவசாயிகள் சாமந்திப்பூக்களை தோட்டங்களில் பறிக்காமல் விட்டு விடுகின்றனர்.

இதன் காரணமாக தோட்டங்களில் சாமந்திப்பூக்கள் காய்ந்து, உதிர்ந்து சேதமடைந்து வருகின்றன. மேலும் விவசாயிகள் டிராக்டர் மூலம், தோட்டங்களில் சாமந்திப்பூ செடிகளை அழித்து வருகின்றனர்.


Next Story