பொதுமக்கள் சாலை மறியல்


பொதுமக்கள் சாலை மறியல்
x
திருப்பூர்


பல்லடம் அறிவொளி நகரில் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இங்கு குடியிருப்பவர்களுக்கு கடந்த சில நாட்களாக குடிநீர் வராததால் நகராட்சி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர். ஆனால் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில் காலதாமதமானதால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் நேற்று திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அடுத்து அவர்களிடம் நகராட்சி அதிகாரிகள் மற்றும் பல்லடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதில் சமாதானம் அடைந்த பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story