மாரியம்மன் கோவில் திருவிழா கொடியேற்றம்


மாரியம்மன் கோவில் திருவிழா கொடியேற்றம்
x
தினத்தந்தி 10 Jan 2023 12:15 AM IST (Updated: 10 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

அருணாப்பேரி மாரியம்மன் கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தென்காசி

பாவூர்சத்திரம்:

பாவூர்சத்திரம் அருகே உள்ள அருணாப்பேரி அழகுமுத்து மாரியம்மன் கோவிலில் 10 நாள் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி அதிகாலை 5.30 மணிக்கு மகா யாக சாலை பூஜையும், காலை 10 மணிக்கு கொடியேற்றமும் நடைபெற்றது. தொடர்ந்து அம்மனுக்கு தினமும் சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. அம்மன் சப்பரம் 6-ம் திருநாளான 13-ந்தேதி மகிழ்வண்ணநாதபுரம், 14-ந்தேதி பெத்தநாடார்பட்டி, பொட்டலூர், 15-ந்தேதி நவநீதகிருஷ்ணபுரம், இலங்காபுரிபட்டணம், 16-ந்தேதி நாகல்குளம் ஆகிய ஊர்களுக்கு வீதிஉலா சென்று வரும். 10-ம் திருநாளான 17-ந் தேதி இரவு அம்மன் சப்பர வீதி உலாவும், அதிகாலையில் பக்தர்கள் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்தா எம்.எஸ்.சிவன்பாண்டி தலைமையில் பக்தர்கள் செய்து வருகின்றனர்.


Next Story