மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
விக்கிரமங்கலம் அருகே மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
அரியலூர்
அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே உள்ள அணைக்குடி கிராமத்தில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் கும்பாபிஷேக விழா கடந்த 22-ந் தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. பின்னர் பல்வேறு சிறப்பு யாகசாலை பூஜைகள் நடைபெற்
றன. நேற்று காலை கடம் புறப்பாடு நடைபெற்றது. பின்னர் வேத பாராயணம், தேவாரம், திருமுறை பதிகங்கள் பாடப்பட்டு சிவாச்சாரியார்கள் கோவில் விமான கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைத்தனர். விழாவில் அணைக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story