வைப்பார் கிராமத்தில் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஆய்வு
விளாத்திகுளம் அருகே வைப்பார் கிராமத்தில் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி
எட்டயபுரம்:
விளாத்திகுளம் அருகே உள்ள வைப்பார் கிராமத்தில் கடந்த சில தினங்களாக குடிநீர் சரியாக வரவில்லை என பொதுமக்கள் துறை ரீதியாக புகார் தெரிவித்தனர். மேலும் வைப்பார் கிராம மக்கள் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயனிடம் புகார் செய்தனர். இதையடுத்து அவர் நேற்று நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது துறை சார்ந்த அதிகாரிகளை தொடர்பு கொண்டு இனிவரும் காலங்களில் குடிநீர் வழங்க நடவடிக்கை மேற்கொண்டார்.
இந்த ஆய்வின் போது ஒன்றிய குழு உறுப்பினர் சுமதி இம்மானுவேல், பஞ்சாயத்து தலைவர் சக்கம்மாள் ராமர், தூத்துக்குடி வடக்கு மாவட்ட தொழிலாளர் அணி அமைப்பாளர் பாலமுருகன் ஆகியோர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story