வாறுகால்-சாலை அமைக்கும் பணியை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஆய்வு
விளாத்திகுளம் அருகே வாறுகால்-சாலை அமைக்கும் பணியை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.
எட்டயபுரம்:
விளாத்திகுளம் அருகே உள்ள புதூர் பேரூராட்சி 3-வது வார்டில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.11 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி கட்டிடம் கட்டப்பட்டு திறப்பு விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு புதூர் பேரூராட்சி மன்ற தலைவர் வனிதா தலைமை தாங்கினார். விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் அங்கன்வாடி கட்டிடத்தை திறந்து வைத்து மரக்கன்றுகளை நட்டினார். நிகழ்ச்சியில் புதூர் கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் செல்வராஜ், தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் இமானுவேல், ஸ்ரீதர் மற்றும் பேரூராட்சி கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்
விளாத்திகுளம் அருகே உள்ள ராமச்சந்திராபுரம் கிராமத்தில் வாறுகால் அமைக்கும் பணி மற்றும் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணியினை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஆய்வு செய்து பணியை விரைந்து முடித்திட பணியாளர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். ஆய்வின்போது புதூர் மத்திய ஒன்றிய தி.மு.க. செயலாளர் ராதாகிருஷ்ணன், பொறியாளர் அலெக்ஸ் ஆகியோர் உடன் இருந்தனர்.