மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஆய்வு
விளாத்திகுளம் பகுதியில் சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் பணி மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஆய்வு
எட்டயபுரம
விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதியில் ஒரு கோடி மரங்கள் நடும் திட்டம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக விளாத்திகுளம் பேரூராட்சியுடன் இணைந்து, மரங்கள் மக்கள் இயக்கம் நடத்தும் வைப்பாற்று படுகையில் சீம கருவேல மரங்களை அகற்றும் பணி நடந்து வருகிறது. இதன் முதற்கட்ட பணியாக 5 கிலோமீட்டர் தூரம் வரை சீம கருவேல மரங்களை அகற்றும் பணியினை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் பணிகளை துரிதமாக முடித்திட பணியாளர்களுக்கு அறிவுரை வழங்கினார். இந்த ஆய்வின்போது விளாத்திகுளம் பேரூராட்சி மன்ற தலைவர் அய்யன்ராஜ், விளாத்திகுளம் மத்திய தி.மு.க. ஒன்றிய செயலாளர் ராமசுப்பு, விளாத்திகுளம் பேரூராட்சி மன்ற துணைத்தலைவர் வேலுச்சாமி, மரங்கள் மக்கள் இயக்க நிர்வாக இயக்குனர் ராகவன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர் மகேந்திரன், பொறுப்பாளர் ஸ்ரீதர் மற்றும் வார்டு செயலாளர்கள், கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.