ரூ.3¾ கோடியில் தினசரி மார்க்கெட் கட்டும் பணி
வெள்ளகோவில் நகராட்சிக்கு சொந்தமான வாரச்சந்தை வளாகத்தில் ரூ.3¾ கோடியில் தினசரி மார்க்கெட் கட்டும் பணியை நேற்று அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தார்.
வெள்ளகோவில்
வெள்ளகோவில் நகராட்சிக்கு சொந்தமான வாரச்சந்தை வளாகத்தில் ரூ.3¾ கோடியில் தினசரி மார்க்கெட் கட்டும் பணியை நேற்று அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தார்.
தினசரி மார்க்கெட்
வெள்ளகோவில் நகராட்சிக்கு சொந்தமான வாரச்சந்தை வளாகத்தில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.3 கோடியே 81 லட்சத்தில் அனைத்து வசதிகளுடன் தினசரி மார்க்கெட் அமைய உள்ளது. இந்த பணிகளை செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நேற்று தொடங்கி வைத்தார். மேலும் ஒழுங்குமுறை விற்பனைக்கூட வளாகத்தில் வருவாய்த்துறை சார்பில் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ்முதியோர் உதவித்தொகை 20 பேருக்கும், விதவை உதவித்தொகை 5 பேருக்கும், உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் இயற்கை மரணம் உதவி தொகை 10 பேருக்கும், இலவச வீட்டுமனை பட்டா 7 பேருக்கும், குடும்ப அட்டை உள்பட மொத்தம் 91 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.7லட்சத்து 18 ஆயிரத்தில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். விழாவில் காங்கேயம் அருகே உள்ள செம்மங்காளிபாளையத்தை சேர்ந்த பாஸ்கர் -நித்தியா தம்பதியின் பெண் குழந்தைக்கு சிவயாழினி என்று அமைச்சர் பெயர் சூட்டினார்.
கலந்து கொண்டவர்கள்
இந்த நிகழ்ச்சியில் தி.மு.க. திருப்பூர் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் இல.பத்மநாபன், பொதுக்குழு உறுப்பினர் எம்.எஸ்.மோகனசெல்வம், ஒன்றிய பொறுப்பாளர் மோளகவுண்டன்வலசுகே.சந்திரசேகரன், நகர செயலாளர் கே.ஆர்.முத்துக்குமார், நகர துணை செயலாளர் சபரி.எஸ். முருகானந்தன், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம், தாராபுரம்ஆர்.டி.ஓ.ஆர்.குமரேசன், காங்கயம் தாசில்தார்ஜெகதீஷ்குமார், நகர்மன்ற தலைவி மு.கனியரசி, நகர் மன்ற துணைத்தலைவர் விஜயலட்சுமி, இலக்கமநாயக்கன்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் சேடன் குட்டை பழனிசாமி, ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் லோகநாதன், நில வருவாய் ஆய்வாளர் கவுரி, கிராம நிர்வாக அலுவலர் கவிதா மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள், நகர்மன்ற ஆணையாளர் மோகன்குமார், நகராட்சி பொறியாளர் மணி உள்பட தி.மு.க. ஒன்றிய, நகர நிர்வாகிகள், வருவாய் துறையினர் கலந்துகொண்டனர்.