அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.1½ கோடிக்கு பருத்தி ஏலம்


அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.1½ கோடிக்கு பருத்தி ஏலம்
x

அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.1½ கோடிக்கு பருத்தி ஏலம் போனது.

ஈரோடு

அந்தியூர்

அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.1½ கோடிக்கு பருத்தி ஏலம் போனது.

பருத்தி

அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விவசாய விளைபொருட்கள் ஏலம் நடைபெற்றது. பருத்தி, தேங்காய், கொப்பரை தேங்காய்களை அந்தியூர், அத்தாணி, ஆப்பக்கூடல், எண்ணமங்கலம், கள்ளிப்பட்டியை சேர்ந்த விவசாயிகள் கொண்டு வந்திருந்தார்கள்.

மொத்தம் 4,500 பருத்தி மூட்டைகள் கொண்டு வரப்பட்டு இருந்தது. இது ஒரு குவிண்டால் குறைந்தபட்ச விலையாக 10 ஆயிரத்து 779 ரூபாய்க்கும், அதிகபட்ச விலையாக 12 ஆயிரத்து 319 ரூபாய்க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.1 கோடியே 50 லட்சத்துக்கு விற்பனையானது.

தேங்காய்

4,415 தேங்காய்கள் கொண்டு வரப்பட்டு இருந்தது. இதில் சிறிய தேங்காய் ஒன்று 5 ரூபாய் 25 காசுக்கும், பெரிய தேங்காய் 14 ரூபாய் 15 காசுக்கும் ஏலம் போனது. மொத்தம் 40 ஆயிரத்திற்கு விற்பனையானது.

கொப்பரை தேங்காய் 109 மூட்டைகள் கொண்டுவரப்பட்டு இருந்தது. இது ஒரு குவிண்டால் குறைந்தபட்ச விலையாக 6 ஆயிரத்து 417 ரூபாய்க்கும், அதிகபட்ச விலையாக 8 ஆயிரத்து 49 ரூபாய்க்கும் ஏலம் போனது. மொத்தம் 2 லட்சத்து 70 ஆயிரத்திற்கு விற்பனையானது.

ஈரோடு, திருப்பூர், கோவை, பொள்ளாச்சி, தூத்துக்குடி பகுதி வியாபாரிகள் விளைபொருட்களை வாங்கிச்சென்றார்கள்.


Next Story