ஈரோடு ஸ்டோனி பாலம் மீன் மார்க்கெட்டில் அலைமோதிய மக்கள் கூட்டம்
ஈரோடு ஸ்டோனி பாலம் மீன் மார்க்கெட்டில் அலைமோதிய மக்கள் கூட்டம்
ஈரோடு
ஈரோடு ஸ்டோனி பாலம் அருகே மீன் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு 20-க்கும் மேற்பட்ட மீன் கடைகள் உள்ளன. இங்கு மற்ற நாட்களைவிட ஞாயிற்றுக்கிழமைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படும். கடல் மீன்கள் அதிக அளவில் விற்கப்படுவதால் மக்கள் அதிகாலை முதலே வந்து மீன்களை வாங்கி செல்வார்கள்.
தூத்துக்குடி, காரைக்கால், ராமேஸ்வரம் போன்ற பகுதிகள் மற்றும் கேரள மாநிலத்தில் இருந்து மீன்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் மீன் மார்க்கெட்டில் மக்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் மீன்கள் விற்பனை அமோகமாக இருந்தது. ஈரோடு மீன் மார்க்கெட்டில் நேற்று விற்பனையான மீன்களின் விலை கிலோவில் வருமாறு:-
வஞ்சரம் -ரூ.650, மத்தி -ரூ.160, மஞ்சள் பாறை -ரூ.500, கிளி மீன் -ரூ.600, சங்கரா -ரூ.300, அயிலை -ரூ.250, நண்டு-ரூ.650, லோகு -ரூ.160, பாறை- ரூ.160, நெய் மீன் -ரூ.130, கட்லா -ரூ.160, ஜிலேபி-ரூ.130. இதேபோல் கருங்கல்பாளையத்தில் உள்ள மீன் மார்க்கெட் மற்றும் ஈரோடு மாநகர் பகுதியில் உள்ள இறைச்சி கடைகளிலும் மக்கள் கூட்டம் வழக்கத்தை விட நேற்று அதிகமாக இருந்தது.