தர்மபுரி சந்தைகளுக்கு சர்க்கரை வள்ளிக்கிழங்கு வரத்து அதிகரிப்பு-கிலோ ரூ.25-க்கு விற்பனை


தர்மபுரி சந்தைகளுக்கு சர்க்கரை வள்ளிக்கிழங்கு வரத்து அதிகரிப்பு-கிலோ ரூ.25-க்கு விற்பனை
x
தினத்தந்தி 17 Nov 2022 12:15 AM IST (Updated: 17 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

தர்மபுரி:

தர்மபுரி மாவட்டத்தில் காரிமங்கலம், மண்ணாடிபட்டி, உச்சம்பட்டி, பண்டார அள்ளி, கல்லு கடை, திப்பம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் சர்க்கரை வள்ளிக்கிழங்கை அதிக அளவில் சாகுபடி செய்து வருகின்றனர். இதற்கான சாகுபடி செலவு குறைவு என்பதால் சர்கரை வள்ளிக்கிழங்கு சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். பயிரிடப்படும் சர்க்கரை வள்ளிக்கிழங்கு 3 மாதங்களில் அறுவடை செய்யப்படுகிறது. இந்த நிலையில் தர்மபுரி மாவட்டம் முழுவதும் சர்க்கரை வள்ளில்கிழங்கு சீசன் தொடங்கியுள்ளது. இதனால் தர்மபுரி உழவர் சந்தை மற்றும் தினசரி மார்க்கட்டுக்கு சர்க்கரை வள்ளிக்கிழங்கு வரத்து அதிகரித்துள்ளது. ஒரு கிலோ ரூ.25 முதல் ரூ.30 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனை ஏராளமான பொதுமக்கள் வாங்கி செல்கின்றனர்.


Next Story