கோபி, அந்தியூர் கூட்டுறவு சங்கங்களில் ரூ.9¾ லட்சத்துக்கு வாழைத்தார்கள் ஏலம்
கோபி, அந்தியூர் கூட்டுறவு சங்கங்களில் ரூ.9¾ லட்சத்துக்கு வாழைத்தார்கள் ஏலம் போனது.
கோபி, அந்தியூர் கூட்டுறவு சங்கங்களில் ரூ.9¾ லட்சத்துக்கு வாழைத்தார்கள் ஏலம் போனது.
கோபி
கோபி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் வாழைத்தார்கள் ஏலம் நடந்தது. இதற்கு மொத்தம் 5 ஆயிரத்து 350 வாழைத்தார்கள் கொண்டு வரப்பட்டன.
இதில் கதலி (கிலோ) ரூ.37-க்கும், நேந்திரன் ரூ.34-க்கும் ஏலம் போனது. பூவன் (தார்) ரூ.240-க்கும், தேன்வாழை ரூ.460-க்கும், செவ்வாழை ரூ.540-க்கும், ரொபஸ்டா ரூ.310-க்கும், மொந்தன் ரூ.230-க்கும், பச்சைநாடன் ரூ.300-க்கும், ரஸ்தாளி ரூ.450-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.7 லட்சத்து 18 ஆயிரத்துக்கு வாழைத்தார்கள் விற்பனை செய்யப்பட்டது.
அந்தியூர்
மேலும் தேங்காய் ஏலம் நடந்தது. இதற்கு 4 ஆயிரத்து 490 தேங்காய்கள் கொண்டு் வரப்பட்டன. இதில் தேங்காய் ஒன்று 9 ரூபாய் முதல் 16 ரூபாய் 20 காசு வரை என மொத்தம் 57 ஆயிரத்து 200 ரூபாய்க்கு விற்பனையானது.
இதேபோல் அந்தியூர் புதுப்பாளையம் வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் வாழைத்தார் ஏலம் நடைபெற்றது. இதற்கு 2 ஆயிரத்து 500 வாழைத்தார்கள் கொண்டு வரப்பட்டன.
ரூ.9¾ லட்சத்துக்கு ஏலம்
இதில் கதலி (கிலோ) ரூ.35-க்கும், நேந்திரம் ரூ.36-க்கும் ஏலம் போனது. பூவன் (தார்) ரூ.200-க்கும், செவ்வாழை ரூ.620-க்கும், ரஸ்தாளி ரூ.520-க்கும், தேன்வாழை ரூ.470-க்கும், ரொபஸ்டா ரூ.380-க்கும், மொந்தன் ரூ.200-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.2 லட்சத்து 60 ஆயிரத்துக்கு வாழைத்தார்கள் விற்பனை செய்யப்பட்டது.
கோபி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம், அந்தியூர் புதுப்பாளையம் வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் நடந்த ஏலத்தில் வாழைத்தார்கள் ரூ.9 லட்சத்து 78 ஆயிரத்துக்கு விற்பனையானது.