கவுந்தப்பாடி ஒழுங்குமுறை கூடத்தில் பழனி கோவில் நிர்வாகம் ரூ.1 கோடிக்கு நாட்டு சர்க்கரை கொள்முதல்


கவுந்தப்பாடி ஒழுங்குமுறை கூடத்தில் பழனி கோவில் நிர்வாகம் ரூ.1 கோடிக்கு நாட்டு சர்க்கரை கொள்முதல்
x

கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.1 கோடிக்கு பழனி கோவில் நிர்வாகம் நாட்டு சர்க்கரை கொள்முதல் செய்தது.

ஈரோடு

கவுந்தப்பாடி

கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.1 கோடிக்கு பழனி கோவில் நிர்வாகம் நாட்டு சர்க்கரை கொள்முதல் செய்தது.

நாட்டு சர்க்கரை

கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நாட்டுச்சர்க்கரை ஏலம் நடைபெற்றது. சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 5,105 மூட்டை நாட்டு சர்க்கரையை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தார்கள்.

இதில் 60 கிலோ எடைகொண்ட சிப்பம் முதல் தரம் திடம் ரக நாட்டு சர்க்கரை குறைந்தபட்ச விலையாக 2,580 ரூபாய்க்கும், அதிகபட்ச விலையாக 2,600 ரூபாய்க்கும் ஏலம் போனது.

மீடியம் ரகம் நாட்டு சர்க்கரை குறைந்தபட்ச விலையாக 2450 ரூபாய்க்கும், அதிகபட்ச விலையாக 2460 ரூபாய்க்கும் ஏலம் போனது. மொத்தம் 4453 மூட்டை நாட்டு சர்க்கரை 1 கோடியே 10 லட்சத்து 29 ஆயிரத்து 600 ரூபாய்க்கு ஏலம் போனது.

பஞ்சாமிர்தம் தயாரிக்க...

இதேபோல் உருண்டை வெல்லம் 30 கிலோ எடைகொண்ட சிப்பம் முதல் தரம் ஒரே விலையாக 1560 ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டது. மொத்தம் 124 மூட்டை உருண்டை வெல்லம் 1 லட்சத்து 93 ஆயிரத்து 440 ரூபாய்க்கும் விற்பனையானது. நாட்டுச்சர்க்கரை மற்றும் உருண்டை வெல்லம் இரண்டையும் மொத்தமாக 1 கோடியே 12 லட்சத்து 23 ஆயிரத்து 40 ரூபாய்க்கு பழனி தண்டாயுதபாணி கோவில் நிர்வாகம் பஞ்சாமிர்தம் தயாரிப்பதற்காக கொள்முதல் செய்தது.


Next Story