வரத்து குறைந்ததால் ஈரோடு மார்க்கெட்டில் முருங்கைக்காய் விலை கிடுகிடு உயர்வு- ஒரு கிலோ ரூ.180-க்கு விற்பனை


வரத்து குறைந்ததால் ஈரோடு மார்க்கெட்டில் முருங்கைக்காய் விலை கிடுகிடு உயர்வு- ஒரு கிலோ ரூ.180-க்கு விற்பனை
x

வரத்து குறைந்ததால் ஈரோடு மார்க்கெட்டில் முருங்கைக்காய் விலை கிடுகிடுவென உயர்ந்தது. இதனால் ஒரு கிலோ ரூ.180-க்கு விற்பனையானது.

ஈரோடு

வரத்து குறைந்ததால் ஈரோடு மார்க்கெட்டில் முருங்கைக்காய் விலை கிடுகிடுவென உயர்ந்தது. இதனால் ஒரு கிலோ ரூ.180-க்கு விற்பனையானது.

விலை கிடுகிடு உயர்வு

நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட் ஈரோடு வ.உ.சி. மைதானத்தில் தற்காலிகமாக செயல்பட்டு வருகிறது. அங்கு 700-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இதில் இரவு நேரத்தில் மொத்த விற்பனையும், பகலில் சில்லரை விற்பனையும் நடந்து வருகிறது. இந்த மார்க்கெட்டுக்கு திண்டுக்கல், கிணத்துக்கடவு, மதுரை, தேனி, ஒட்டன்சத்திரம், தாளவாடி, சத்தியமங்கலம், கிருஷ்ணகிரி, ஓசூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து காய்கறிகள் அதிகமாக விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது.

இந்தநிலையில் பனிப்பொழிவு காரணமாக காய்கறிகளின் விளைச்சல் பாதிக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக மார்க்கெட்டுக்கு தினமும் 3 டன் முருங்கைக்காய் விற்பனைக்காக கொண்டு வரப்படும். ஆனால் கடந்த சில நாட்களாக வரத்து குறைவாக காணப்படுகிறது. நேற்று அரை டன் மட்டுமே வரத்தாகி இருந்தது. இதனால் முருங்கைக்காய் விலை கிடு கிடுவென உயர்ந்தது.

ஒரு கிலோ ரூ.180

கடந்த மாதம் ஒரு கிலோ முருங்கைக்காய் ரூ.60-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதன்பிறகு படிப்படியாக விலை உயர்ந்து நேற்று ஒரு கிலோ முருங்கைக்காய் ரூ.160 முதல் ரூ.180 வரை விற்பனையானது. இதனால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்தார். இதேபோல் மற்ற காய்கறிகளின் விலையும் சற்று அதிகரித்து உள்ளது. அதன் விலை விவரம் வருமாறு:-

பீன்ஸ் - ரூ.30, வெண்டைக்காய் - ரூ.30, கேரட் - ரூ.60, பீட்ரூட் - ரூ.60, கத்தரிக்காய் - ரூ.70, புடலங்காய் - ரூ.40, பீர்க்கங்காய் - ரூ.40, பாகற்காய் - ரூ.40, சுரைக்காய் - ரூ.20, மிளகாய் - ரூ.50, தக்காளி - ரூ.10 முதல் ரூ.15, சின்ன வெங்காயம் - ரூ.80, பெரிய வெங்காயம் - ரூ.40, முட்டைகோஸ் - ரூ.20, காலிபிளவர் - ரூ.40, உருளைக்கிழங்கு - ரூ.40


Next Story