பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஈரோடு மார்க்கெட்டில் குவிந்த பூசணி காய்கள்- வண்ண கோலப்பொடி விற்பனையும் சூடுபிடித்தது


பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஈரோடு மார்க்கெட்டில் குவிந்த பூசணி காய்கள்- வண்ண கோலப்பொடி விற்பனையும் சூடுபிடித்தது
x

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஈரோடு மார்க்கெட்டில் பூசணி காய்கள் விற்பனைக்கு குவிந்தன. வண்ண கோலப்பொடியின் விற்பனையும் சூடுபிடிக்க தொடங்கியது.

ஈரோடு

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஈரோடு மார்க்கெட்டில் பூசணி காய்கள் விற்பனைக்கு குவிந்தன. வண்ண கோலப்பொடியின் விற்பனையும் சூடுபிடிக்க தொடங்கியது.பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஈரோடு மார்க்கெட்டில் பூசணி காய்கள் விற்பனைக்கு குவிந்தன. வண்ண கோலப்பொடியின் விற்பனையும் சூடுபிடிக்க தொடங்கியது.

பூசணி

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை தை மாதம் 1-ந் தேதி சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி வருகிற 15-ந் தேதி பொங்கல் பண்டிகையை கொண்டாட தமிழக மக்கள் தயாராகி வருகிறார்கள். விழாவையொட்டி பூஜைக்கு பயன்படுத்தப்படும் பூசணி காய்கள் வரத்து அதிகரிக்க தொடங்கி விட்டது. ஈரோடு வ.உ.சி. மைதானத்தில் செயல்படும் காய்கறி மார்க்கெட்டில் பூசணி காய்கறி விற்பனைக்காக குவிக்கப்பட்டு உள்ளன.

இதுகுறித்து வியாபாரி ஒருவர் கூறுகையில், "ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து பூசணி காய்கள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன. இதில் ஒரு பூசணி ரூ.30-க்கு விற்பனையாகிறது. கடந்த ஆண்டு ரூ.20-க்கு விலைபோனது. வரத்து குறைவு காரணமாக விலை அதிகமாகி உள்ளது", என்றார்.

வண்ண கோலம்

பள்ளி, கல்லூரிகள், அலுவலகங்களில் பொங்கல் விழா தற்போது இருந்தே கொண்டாடப்பட்டு வருகிறது. இதனால் பூஜை பொருட்களின் விற்பனை களைகட்டி வருகிறது. பொங்கல் பண்டிகையின்போது வீடுகளின் வாசலில் வண்ண கோலமிடுவது வழக்கம். அதேபோல் கல்வி நிறுவனங்கள், தனியார் அலுவலகங்களின் வளாகங்களில் வண்ண கோலமிட்டு பொங்கல் வைக்கப்படும். இதையொட்டி வண்ண கோலப்பொடிகளின் விற்பனையும் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.

சாலையோரங்களில் கோலப்பொடிகள் விற்பனை செய்யப்படுகிறது. பல்வேறு இடங்களில் உள்ள மளிகை கடைகளிலும் கோலப்பொடிகள் விற்பனைக்காக வைக்கப்பட்டு உள்ளன. பெண்கள் ஆர்வமாக வண்ண கோலப்பொடிகளை வாங்கி செல்கிறார்கள்.



Next Story